சர்வதேச கடலில் போதைப்பொருள் கடத்துபவர் சிக்கினார்!

Date:

பாதாள உலக கும்பல் உறுப்பினர் ‘ஹரக் கட்டா’வின் போதைப் பொருள் வலையமைப்பிற்கு சர்வதேச கடல் மார்க்கமாக போதைப்பொருள் கடத்தும் ரோலர் இயக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பல நாள் மீன்பிடி கலங்களில் சர்வதேச கடற்பரப்பிற்கு சென்று, போதைப்பொருளை நாட்டுக்கு கொண்டு வருவதாக இவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் விற்பனையின் மூலம் பெறப்பட்ட ரூ .5.2 மில்லியன் பணமும் அவரிடமிருந்து மீட்கப்பட்டது.

விசாரணையில் ஆழ்கடல்களில் உள்ள கப்பல்களில் உள்ள போதைப்பொருளை, ரோலரில் சென்று பெற்று, நாட்டிற்குள் கடத்துவதற்காக சிறிய படகுகளிற்கு விநியோகித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் நேற்று கோட்டகொடவில் கைது செய்யப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்