26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil
விளையாட்டு

ரி 20 போட்டியில் திடீரென மயங்கி விழுந்த 2 வீராங்கணைகள்!

பாகிஸ்தான் அணிக்கு எதிரான ரி20 போட்டியில், மேற்கியந்தீவுகள் பெண்கள் கிரிக்கெட் வீராங்கணைகள் இருவர் மைதானத்தில் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணி, மேற்கியந்தீவுககளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகளிற்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரில் 2வது ஆட்டம் ஆன்டிகுவாவில் நேற்று முன்தினம் நடந்தது. மழை குறுக்கீடுக்கு மத்தியில் நடந்த இந்த போட்டியில் முதலில் ஆடிய மேற்கியந்தீவுகள் அணி 6 விக்கெட்டுக்கு 125 ஓட்டங்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 103 ஓட்டங்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி மேற்கியந்தீவுகள் அணி 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மேற்கியந்தீவுகள் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இந்த போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த மேற்கியந்தீவுகளின் வேகப்பந்து வீச்சு வீராங்கனை சினெல் ஹென்றி திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அணி மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து ஸ்டிரெச்சர் மூலம் மைதானத்தை விட்டு வெளியில் தூக்கி சென்றனர்.

அடுத்த சில நிமிடங்களில் அந்த அணியின் மற்றொரு வீராங்கனையான செடின் நேஷன் மயக்கம் அடைந்து மைதானத்தில் சரிந்தார். இதனால் ஆட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு இரண்டு மாற்று வீராங்கனைகள் களம் இறக்கப்பட்டு போட்டி தொடர்ந்து நடந்தது.

மயங்கி விழுந்த இரு வீராங்கனைகளும் அருகில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது இருவரும் சுய நினைவுடன் நன்றாக இருப்பதாக மேற்கிந்தியத் தீவுகள் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவர்கள் இருவரும் மயங்கி விழுந்ததற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வழக்கமான ஃபோர்முக்கு திரும்பியது இலங்கை: வெறும் 42 ஓட்டங்களில் சுருண்டது!

Pagetamil

“ஒரு நல்ல மனிதனாக நினைவில் நிற்க விரும்புகிறேன்”: டென்னிஸில் இருந்து ஓய்வை அறிவித்த ரஃபேல் நடால் நெகிழ்ச்சி!

Pagetamil

‘விடை பெறுகிறேன்!’ – ஓய்வை அறிவித்த நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் டிம் சௌத்தி

Pagetamil

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அல்ஜீரியாவின் இமானே கெலிஃப் ஆண்: மருத்துவ அறிக்கையில் உறுதி

Pagetamil

ஐபிஎல் 2025: தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

Pagetamil

Leave a Comment