நுரைச்சோலையில் ஒரு நபரைக் கடத்தி தாக்கிய குற்றச்சாட்டில் நான்கு இராணுவ வீரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தாக்குதல் பற்றி கிடைத்த முறைப்பாட்டையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தில் நான்கு வீரர்கள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்து இராணுவத்தினருக்கு பொலிசார் அறிவித்தனர்.
இதையடுத்து, இராணுவ பொலிஸ் பிரிவு பின்னர் நான்கு சந்தேக நபர்களையும் பொலிசில் ஒப்படைத்தது.
ஜூன் 30 அன்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
ஒரு இராணுவ கப்டன், ஒரு கோப்ரல் மற்றும் இரண்டு லான்ஸ் கோப்ரல்கள் இந்த சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர்.
தனிப்பட்ட தகராறு தொடர்பாக பொதுமகன் ஒருவரை கடத்தித் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கைதான நான்கு சந்தேகநபர்களும் இன்று புத்தளம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.