27.2 C
Jaffna
February 7, 2025
Pagetamil
இந்தியா

இணையத்தளத்தில் ஆபாச பேச்சு: ரவுடி பேபி சூர்யா உள்ளிட்டவர்கள் மீது புகார்!

இணைய தளங்களில் ஆபாச பேச்சுக்களை பதிவு செய்து வரும் ரவுடி பேபி சூர்யா உள்பட சிலர் மீது நடவடிக்கை எடுக்ககோரி புகாரளிக்கப்பட்டுள்ளது.

தமிழக காங்கிரஸ் கட்சி தென்சென்னை மாவட்ட செயலாளர் புனிதவள்ளி, சமூக ஆர்வலர் சுமித்ரா, எல்லை பாதுகாப்பு படை வீரர் காளிராஜ் ஆகியோர் கூட்டாக இன்று தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்தனர்.

ஆனால் டிஜிபி அலுவலக பாதுகாப்பு பிரிவு போலீசார் இன்று அதிகாரிகள் இல்லை என்பதால் புகாரை ஆன்லைனில் கொடுக்கும் படி அறிவுறுத்தினர்.

பிறகு செய்தியாளர்களிடம் சமூக ஆர்வலர் சுமித்ரா கூறுகையில், “சமூக வலைதளங்களில் ரவுடி பேபி சூர்யா, திருச்சி சாதனா, சந்தான லட்சுமி, காத்து கருப்பு, சேலம் மணி உள்பட சிலர் ஆபாச பேச்சுக்களை பேசியும் நடித்தும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்தி இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்கின்றனர்.

இவர்களின் ஆபாச பேச்சுக்கள் முகம் சுழிக்க வைக்கிறது. பள்ளி மாணவ- மாணவிகள், இளைஞர்கள் போன்றோர் இவர்களின் ஆபாச பேச்சுக்களால் மிகவும் பாதிக்கப்பட உள்ளதால் இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களின் ஆபாச இணைய தளங்களை முடக்க செய்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சுமித்ரா கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

டிரம்ப்க்கு எதிராக காங்கிரஸ் கட்சி இந்தியாவில் ஆர்ப்பாட்டம்

east tamil

குழந்தைக்குள்ளே குழந்தை

east tamil

மூன்று ஆசிரியர்களால் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மாணவி

east tamil

உணவு முடிந்ததால் திருமணத்தை நிறுத்தி மாப்பிள்ளை வீட்டார்: பொலிஸ் நிலையத்தில் நடந்த திருமணம்!

Pagetamil

“மக்களுக்கான அரசியலை முன்வைத்து…” – தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜுனா பதிவு

Pagetamil

Leave a Comment