யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன், நல்லூர் பிரதேசசபை தவிசாளர் பா.மயூரன் ஆகியோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தி, உள்ளூராட்சி உறுப்புரிமையை நீக்க கோரி, கொழும்பு உயர்நீதிமன்றத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.
இதே கோரிக்கையை முன் வைத்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரின் அங்கத்துவத்தை நீக்கி, அவர்களின் உள்ளூராட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கோரப்பட்டிருந்தது.
எனினும், யாழ் மேல் நீதிமன்றம் இருவரின் உள்ளூராட்சி உறுப்புரிமைக்கும் இடைக்கால தடை விதிக்கவில்லை.
இதையடுத்து, இருவரின் உறுப்புரிமையை இடைநிறுத்தக் கோரி கொழும்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1
1