கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 563 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 46,823 நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
நேற்று இரத்னபுரி பகுதியில் 47 பேரும், மாத்தளை பகுதியில் 66 பேரும், மட்டக்களப்பில் 49 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த பகுதிகளிலேயே அதிகமானவர்கள் கைதாகினர்.
மேற்கு மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் றே்று 5,229 நபர்கள் சோதனையிடப்பட்டனர். இதில், பயணக் கட்டுப்பாடுகளை மீறி மாகாணங்களிற்கிடையில் பயணம் செய்ய முயன்ற 174 நபர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
இதேவேளை, நுவரெலியாவில் உள்ள ஒரு தனியார் காப்புறுதி நிறுவனத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 15 பேர் சுகாதார வழிகாட்டுதல்களை மீறியதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அவர்கள் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலை முடித்த பின்னர் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.