27.8 C
Jaffna
December 23, 2024
Pagetamil
மலையகம்

எனது குடும்பத்தை சித்திரவதை செய்ய வேண்டாம்: கடைசி கடிதம்!

பலாமரத்தில் தூக்கிட்ட நிலையில் ஒருவரின் சடலத்தை நோர்வூட் பொலிஸார் மீட்டுள்ளனர்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வெஞ்சர் லோவலோரன்ஸ் பிரிவை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 49 வயதுடைய திருக்கேதீஸ்வரன் (சங்கர்) என்பரவே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை அவரது வீட்டிலிருந்து சுமார் 150 மீட்டர் தூத்திலுள்ள பலாமரமொன்றிலேயே அவர் சடலமாக மீட்க்கட்டுள்ளார்.

பலாமரத்தில் சடலமொன்று தொங்குவதை கண்ட அயல் வீட்டார் வழங்கிய தகவலுக்கமையவே சடலம் மீட்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது அதிகாலை மூன்று மணியளவில் மாடு பிடிக்க செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரின் சட்டை பையில் இருந்து எனது மரணத்தை நானாகவே தேடிக்கொண்டேன்.

எனது குடும்பத்தினரை யாரும் துன்புறுத்த வேண்டாம் எனது சுய சிந்தனையிலேயே இந்த கடிதத்தை எழுதுகிறேன் என்று எழுதிய கடிதமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். கடன் சுமையே தற்கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதாக தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மரண விசாரணை அதிகாரி தனலக்ஷ்மி தலைமையில் இடம்பெறவுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போலி நாணயத்தாள்களுடன் கைதான பாடசாலை மாணவர்கள்

Pagetamil

நானுஓயாவில் வீதியைவிட்டு விலகிய லொறி மண்மேட்டில் மோதி விபத்து

east tamil

ஹட்டனில் பஸ் விபத்தில் 3 பேர் பலி

east tamil

தலை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடல்

east tamil

விபத்தையடுத்து இ.போ.ச சாரதி, நடத்துனரை தாக்கிய கும்பல்

Pagetamil

Leave a Comment