இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 44,111 பேருக்கு தொற்று!

Date:

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 44,111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு 3,05,02,362 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் ஒரே நாளில் 738 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,01,050 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,96,05,779 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 57,477 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,95,533 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் நேற்று வரை பொதுமக்களுக்கு 34,46,11,291 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்