24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
குற்றம்

பணத்திற்காக சிறுமி விற்பனை: இதுவரை 26 பேர் கைது!

15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை மற்றும் இணையத்தளத்தின் ஊடாக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் இதுவரை 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய இன்னும் 16 பேரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களுள் 20 பேர் குறித்த சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர்கள் என்றும், ஏனைய 6 பேர் அச்சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தளத்தில் விற்பனை செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றவர்கள் என இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுள் குறித்த சிறுமியின் தாயும், அச்சிறுமியை இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தியவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்ட போது நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நால்வரில் இரத்தினக் கல் வியாபாரி ஒருவரும், கப்பல் ஒன்றின் கப்டன் ஒருவரும், அவரது உதவியாளரும் உள்ளடங்குவதாக தெரிவித்தார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சிறுமியின் கைபேசியைச் சோதனையிட்ட போது மேலும் பலர் தொடர்பில் தகவல்கள் கிடைத்து வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மனைவியை கொன்ற கணவன்!

Pagetamil

கனடா போயும் திருந்தாத யாழ்ப்பாண கணக்காளர்: ஓசிக் குடிக்கு ஆசைப்பட்டு விமானத்தில் சிக்கிய பரிதாபம்!

Pagetamil

யாழில் பூசகரை கட்டி வைத்து கொள்ளை: பெண் உள்ளிட்ட 2 பேர் கைது!

Pagetamil

74 வயது மூதாட்டியை வல்லுறவுக்குள்ளாக்கி 5000 ரூபா கொள்ளையடித்த 31 வயது திருடன் கைது!

Pagetamil

யாழில் காதலனுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை வைத்து யுவதியிடம் கப்பம் பெற முயன்ற 2 பொலிசார் கைது!

Pagetamil

Leave a Comment