யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்காக அடுத்த கட்டமாக, மேலும் 50,000 சினோஃபார்ம் கோவிட் 19 தடுப்பூசிகள் நாளை எடுத்து வரப்படவுள்ளன.
இவை, கோவிட் தொற்று அதிகமுள்ள பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன. அத்துடன் தற்போது இடம்பெற்றுவரும் இரண்டாம் தவணை தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன் இவற்றை மக்களுக்கு வழங்கும் பணிகள் ஆரம்பமாகும் என்றும், தடுப்பூசி வழங்கும் மையங்கள் தொடர்பில் அதிகாரிகள் விரைவில் அறிவிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1