தமிழ் தேசிய கட்சிகளிற்கிடையில் ஒற்றுமைக்கான சந்திப்பிற்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே சூம் வழியாக ஒரு சந்திப்பை திட்டமிட்டு, அதில் தம்முடன் ஒத்துவராத கட்சிகளிற்கு அழைப்பு அனுப்பாமல் விட்டதன் மூலம் ரெலோ தனது தலையில் தானே மண்ணள்ளி போட்டது.
இதனால் அந்த கலந்துரையாடல் இடம்பெறவில்லை.
இம்முறையும் சில விடுபடல்கள் இருந்தாலும், தனிப்பட்ட காரணங்களை கருத்தில் கொள்ளாமல் ரெலோ ஒற்றுமை அழைப்பை விடுத்துள்ளது.