இயற்கை உரம் அரசின் கொள்கையினை நடைமுறைப்படுத்துவதில் காட்டும்
அக்கறையினை விவசாயிகளின் தேவையினை பூர்த்தி செய்வதிலும் செலுத்த வேண்டும்
– இரணைமடு கமக்கார அமைப்புகளின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன்
இயற்கை உர பயிர்ச்செய்கை விவசாயிகள் எதிரானவர்கள் அல்ல மாறாக அதனை அரசு
படிப்படியாக மேற்கொண்டிருக்க வேண்டும் அத்தோடு அரசின் கொள்கையினை
நடைமுறைப்படுத்துவதில் காட்டும் அக்கறையினை விவசாயிகளின் தேவைகளை
பூர்த்தி செய்வதிலும் செலுத்த வேண்டும் என கிளிநொச்சி இரணைமடு கமக்கார
அமைப்புகளின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்துள்ளார்.
இன்று (01) கிளிநொச்சி ஊடக அமையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்
இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
இயற்கை உரம் விவசாயம் என்பது விவசாயிகளுக்கு வெறுப்பானதோ அல்லது
விரும்பத்தகாத ஒன்றல்ல 60 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை உரத்தை
பயன்படுத்தியே விவசாய நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுப்பட்டு வந்தனர்.
அதில் விவசாயிகள் அடைந்த நன்மைகள் அதிகம் அதனாவ் விவசாயிகள்
பாதிக்கப்படவில்லை. அப்போதிருந்த சனத்தொகைக்கு இயற்கை உரத்தை பயன்படுத்தி
மேற்கொள்ளப்பட்ட உற்பத்திகள் போதுமானதாக இருந்தது.
ஆனால் அரச திணைக்களங்களில் 1960 ஆம் ஆண்டுகளுக்கு பின்னர் விவசாய
புரட்சி என்கின்ற பெயரில் அரச திணைக்களங்களால் இரசாயன உரம் கிருமி
நாசினிகளை விவசாயிகள் மத்தியில் திணித்து ஆதாவது ஆசைக்காட்டி இயற்கையோடு
இருந்த விவசாயிகளை அதிலிருந்து விடுவித்தது விவசாய திணைக்களங்களே. எனவே
விவசாயிகள் இதற்கு எதிானவன் என்பது தவறானது. ஆனால் இன்று இருக்கின்ற
சனத் தொகைக்கு ஏற்ப இயற்கை உரத்தை பயன்படுத்தி விவசாய நடவடிக்கைகயில்
உற்பத்திகளை மேற்கொள்ள முடியாது. நூறு வீதம் இயற்கை உரத்தை பயன்படுத்தி
விவசாய நடவடிக்கைகளுக்குச் சென்றால் நாட்டின் தேவையினை பூர்த்தி செய்யும்
அளவுக்கு உற்பத்திகளை மேற்கொள்ள முடியாது. நாட்டின் கேள்வியை பூர்த்தி
செய்ய முடியாத அளவுக்கு உற்பத்தி காணப்படும்.
எனவே தேவையினை பூர்த்தி செய்ய முடியாத அளவில் நாட்டின் உற்பத்தி
காணப்படும் போது அத் தேவையினை பூர்த்தி செய்வதற்கு வெளிநாடுகளிலிருந்து
இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படும் அவ்வாறு இறக்குமதி செய்கின்ற போது
அப்பொருட்களில் இராசயணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்காது என்பதற்கு என்ன
உத்தரவாதம் இருக்கிறது.
எனவே இயற்கை உரத்திற்கு செல்கின்ற போது அதனை படிப்படியாக மேற்கொள்ள
வேண்டும் என்பதே விவசாயிகளின் நிலைப்பாடாகும் கிளிநொச்சி மாவ்ட்டத்தை
பொறுத்தவரை 75 ஆயிரம் ஏக்கர் வயல் நிலங்களும்,10 ஆயிரம் ஏக்கர்
மேட்டுநிலப் பயிர்ச்செய்கை நிலங்களும் காணப்படுகின்றன. எனவே இந்த 75
ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புக்கும் இயற்கை உரத்தை வழங்ககூடிய ஏதாவது
ஏற்பாடுகள் அரசோ அல்லது மாவட்ட மட்டத்தில் உள்ள துறைசார் திணைக்களங்களோ
மேற்கொண்டிருக்கின்றார்களா? இயற்கை உரத்திற்கு விவசாயிகள் செல்ல தயாராக
இருந்தாலும் இயற்கை உரத் தேவையினை பூர்த்தி செய்வதற்கு என்ன
நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எதிர்வருகின்ற போகத்தை இயற்கை உரத்தை பயன்படுத்தி செய்யத் தயாராக உள்ள
போதும் அதற்கு என்ன ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டுள்ளது? மிகபெரும் விவசாய
மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு
நம்பிககையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. எம்மை பொருத்தவரை
நெற்பயிர்ச்செய்கைக்கு இயற்கை உரம் செயற்றிட்டம் பொருத்தமானதாக
இருக்காது. உற்பத்தியின் அளவு குறைவடையும், உள்நாட்டு விவசாய
உற்பத்திகள் வீழ்ச்சியடையும். எனவே அரசின் இயற்கை உர கொள்கையை
நடைமுறைப்படுத்துவதில் காட்டும் தீவிரத்தை விவசாயிகளின் தேவையினை
பூர்த்தி செய்வதிலும் செலுத்த வேண்டும் எனக் கோட்டுக்கொள்கின்றோம் எனத்
தெரிவித்துள்ளார்




