காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் பஞ்சாப் மாநில முன்னாள் கிரிக்கெட் பிளேயரும், மாநிலவ காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜோத்சிங் சித்து சந்தித்து பேசினார். இது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பஞ்சாப் மாநில எம்எல்ஏவுமான நவ்ஜோத் சிங் சித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். ஏற்கனவே அம்மாநில முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கும், சித்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில், சித்து ராகுலை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் 2022ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சியில் சில மாற்றங்களை செய்ய காங்கிரஸ் கட்சியின் தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக கடந்த மாதம் மாநில முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான கேப்டன் அமரீந்தர் சிங் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். தொடர்ந்து அவர் பிரியங்கா காந்தியையும் சந்தித்து பேசினார்.
இந்த நிலையில் புதன்கிழமை (ஜூன் 30) நவ்ஜோத் சிங் சித்து, ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது கட்சி மற்றும் ஆட்சி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது. முன்னதாக நவ்ஜோத் சித்து, பிரியங்கா காந்தியை சந்தித்து பேசினார்.
சித்து ராகுல் மற்றும் பிரியங்காவை சந்தித்து பேசியிருப்பது பஞ்சாப் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.