வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவ மேஜர் ஜெனரல் இன்று ஹபரன பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து, கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் டிஐஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
இராணுவ மேஜர் ஜெனரல் மீது இரண்டு புகார்கள் வந்துள்ளதாக டி.ஐ.ஜி அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து இராணுவ விசாரணைக் குழுவும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த சம்பவம் மின்னேரியா தேசிய பூங்காவிற்கு வெளியே வெள்ளிக்கிழமை (25) பதிவாகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாக இராணுவ ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
யானைக்குட்டிகள் கடத்தல் தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம் மேற்கொண்ட சோதனையில், சந்தேகத்திற்கிடமான இரண்டு இராணுவ வாகனங்கள் நிறுத்தாமல் சென்று, முகாமிற்குள் நுழைந்ததை தொடர்ந்து இந்த சர்ச்சை தோன்றியது.