வடக்கின் இன்றைய பிசிஆர் பரிசோதனை முடிவுகள்!

Date:

வட மாகாணத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனைகளில் 59 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம், யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவபீட ஆய்வுகூடம் என்பவற்றில் இன்று 632 பேரின் மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இதில், யாழ் மாவட்டத்தில்- தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், யாழ் போதனா வைத்தியசாலையில் 10 பேர், காரைநகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர், பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேர், உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 4 பேர், மானிப்பாய் பிரதேச வைத்தியசாலையில் 8 பேர், பண்டத்தரிப்பு பிரதேச வைத்தியசாலையில் 2 பேர், யாழ் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேர், சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேர் என 38 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

மன்னார் மாவட்டத்தில், மன்னார் பொது வைத்தியசாலையில் 3 பேர் தொற்றிற்குள்ளாகினர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில்- புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் ஒருவர் தொற்றிற்குள்ளாகினார்.

இது தவிர, பெரியகட்டு தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேர், வெள்ளா முள்ளிவாய்க்கால் 681 படையணி தனிமைப்படுத்தல் மையத்தில் ஒருவர், இரணைமடு தனிமைப்படுத்தல் மையத்தில் 2 பேர், வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் 12 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

 

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்