மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக விதிக்கப்பட்டிருந்த தடை நிபந்தனைகளின் அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிருந்து வரும் பயணிகள் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனம் தெரிவித்திருந்தது.
குறித்த தடை ஜூலை 1 முதல் ஜூலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1