ரயில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் சங்கத்தினரால் இன்று (30) காலை காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.
இலத்திரனியல் ரயில் பயணச்சீட்டு அறிமுகப்படுத்துவதில் இடம்பெற்றிருக்கும் நிதி மோசடியை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
ரூ.4.4 பில்லியன் மதிப்பிலான ரயில் டிஜிட்டல் டிக்கட் செயல்முறை, ஒரு வெளிநாட்டு நிறுவத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்படுவது நிதி மோசடிக்கு வழியேற்படுத்தும் என தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன. திட்ட அறிக்கைகளை தயாரிக்கவே 27 மில்லியன் அமெரிக்க டொலர்களிற்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியிருந்தனர்.
போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகேவுடன் நடத்தப்பட்ட பேச்சுவாரத்தைகளை அடுத்து, பணிப்புறக்கணிப்பை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இன்று நள்ளிரவு வரை பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது.




