தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு, மேதகு என்கிற பெயரில் முழு நீளத் திரைப்படமாக வெளிவந்துள்ளது. தமிழீழத் திரைக்களம் சார்பில், பொறியாளரும் தமிழ் உணர்வாளருமான கிட்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.
பிரபாகரனின் பிறப்பு முதல் அவரின் முதல் புரட்சிகர அமைப்பான புதிய தமிழ்ப் புலிகள் உருவான காரணம் வரை, இந்த முதல் பாகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
கடந்த வெள்ளியன்று வெளியான இந்தத் திரைப்படத்துக்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. சில குறைபாடுகள் இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டாலும்,ஓரளவு சாதகமான வரவேற்பே கிடைத்தது.
குட்டிமணி தன்னுடைய 17 வயது முதல் `தாயின் கருவறை’ என்கிற பெயரில் ஒரு அறக்கட்டளையைத் தொடங்கி, ஆதரவற்றவர்களுக்கு உணவும், உடையும், கல்வி பயில வழியில்லாத ஏழை மாணவர்களுக்குப் பொருளாதார உதவிகளையும் செய்து வருகிறார்.
அதேபோல, தன் சொந்த ஊரான சிவகங்கை பேருந்து நிலையத்துக்கு அருகே, `அட்சயப்பாத்திரம்’ என்னும் பெயரில் உணவுகளைப் பத்திரப்படுத்த குளிர்சாதனப் பெட்டியும், `அன்புச் சுவர்’ என்கிற பெயரில் உடைகளைப் பத்திரப்படுத்த பீரோ வசதிகளையும் ஏற்படுத்தி சேவை செய்து வருகிறார். உணவு, உடை தேவைப்படுபவர்கள் இங்கு எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
“என் ஊரான சிவகங்கையில் பசியோடு யாரும் உறங்கப் போகக் கூடாது அதுதான் எங்கள் விருப்பம். தாய், தந்தையில்லாத, பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த எழைக் குழந்தைகளைப் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். அரசு மருத்துவமனைகளில் ஆதரவற்றவர்கள் யாரும் சிகிச்சை எடுத்தால் அவர்களுடன் தங்கி அவர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறோம்.
இதுவரைக்கும் ஆயிரம் பேருக்கு மேல் இரத்ததானம் செய்திருக்கிறோம். `காசில்லாமல் கல்வி கற்க முடியாத நிலையும், வறுமையால் பட்டினி கிடக்கும் நிலைமையும் எங்கள் ஊரில் யாருக்கும் வரக்கூடாது. ‘ இதுவே எங்கள் அறக்கட்டளையின் தாரக மந்திரம் ஆரம்பத்தில் நான் மட்டும்தான் இந்த சேவைகளைச் செய்து வந்தேன். பிறகு என் நண்பர்களும் என்னோடு சேர்ந்துகொண்டார்கள். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தாலும், தற்போது பொதுச்சேவைகள் செய்வதற்காக திரைப்படங்களில் நடிக்க விரும்புகிறேன். அதன்மூலம் என் சேவைகளை விரிவுபடுத்தமுடியும் என நம்புகிறேன் ” என்கிறார் மணிகண்டன் என்கிற குட்டிமணி.