இந்தியாவில் நேற்று 45,641 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,03,61,999 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,641 அதிகரித்து மொத்தம் 3,03,61,699 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 816 அதிகரித்து மொத்தம் 3,98,484 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 60,258 பேர் குணமாகி இதுவரை 2,94,19,497 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 5,31,803 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 8,085 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 60,51,633 ஆகி உள்ளது நேற்று 231 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,21,804 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,623 பேர் குணமடைந்து மொத்தம் 58,09,548 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,17,098 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 13,550 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,10,508 ஆகி உள்ளது. இதில் நேற்று 104 பேர் உயிர் இழந்து மொத்தம் 13,094 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 10,283 பேர் குணமடைந்து மொத்தம் 27,97,779 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 99,177 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,222 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,40,428 ஆகி உள்ளது இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,929 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 14,724 பேர் குணமடைந்து மொத்தம் 27,19,479 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 85,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 4,512 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 24,75,190 ஆகி உள்ளது இதில் நேற்று 118 பேர் உயிர் இழந்து மொத்தம் 32,606 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,013 பேர் குணமடைந்து மொத்தம் 24,03,349 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 39,335 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 3,620 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 18,85,716 ஆகி உள்ளது. நேற்று 41 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,671 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,757 பேர் குணமடைந்து மொத்தம் 18,32,971 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 40,074 பேர் சிகிச்சையில் உள்ளனர்.