இந்தியாவில் மேலும் ஒரு தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!

Date:

இந்தியாவில் கொரோனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும். மேலும், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஊகான் நகரில் கடந்த 2019ம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெறும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான போரில் உலகம் முழுவதும் பல தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்தியாவை பொறுத்தவரை கோவேக்சின், கோவிஷீல்டு மற்றும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்க தயாரிப்பான மாடர்னா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இந்தியாவில் கொரோனாவுக்கு பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட 4வது தடுப்பூசியாகும். மேலும், இந்த தடுப்பூசியை இறக்குமதி செய்ய சிப்லா நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாடர்னா அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாகாணத்தில் இருந்து இயங்குகிறது. பெரும்பாலான தடுப்பு மருந்து இங்குதான் உற்பத்தி செய்யப்படும். மாடர்னா தடுப்பு மருந்து உடலில் செலுத்தபட்ட 95 சதவீதம் பேருக்கு பலனளித்துள்ளது.

மாடர்னாவின் இரு டோஸ்கள் இடையே நான்கு வார கால (28 நாட்கள்) இடைவெளி இருக்க வேண்டும்.

மாடர்னா மருந்தை -20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்க முடியும்.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்