Pagetamil
உலகம்

பிரித்தானிய பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை!

பிரித்தானிய பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதிக்க கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் திட்டமிட்டுள்ளார்.

பிரித்தானிய பள்ளிகளில் ஒழுக்கத்தை மேம்படுத்தவும், அமைதியான வகுப்பறைகளை உருவாக்கவும் செல்போனை தடை செய்வது அவசியம் என நாட்டின் கல்விச் செயலாளர் கவின் வில்லியம்சன் (Gavin Williamson) கூறுகிறார்.

பள்ளிகளில், செல்போன் போன்ற சாதனங்கள் மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் மற்றும் அவர்களது படிப்பை சேதப்படுத்தும் என விவரிக்கும் வில்லியம்சன், பள்ளிகளை மொபைல் இல்லாத வளாகங்களாக மற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

“மொபைல் போன்கள் கவனத்தை சிதறடிப்பது மட்டும் அல்ல,அதனை தவறாகப் பயன்படுத்தும்போது அல்லது அதிகமாகப் பயன்படுத்தும்போது, ​​அவை மாணவர்களின் மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கு தீங்கு விளைவிக்கும்” என்று கல்விச் செயலாளர் கூறினார்.

இந்த திட்டம் ஒரு ஆலோசனையாகவே இருக்கும் நிலையில், வகுப்பறைகளில் நல்ல நடத்தைகளை நிர்வகிப்பது குறித்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பிற பள்ளி ஊழியர்களிடம் கருத்துக்கள் கேட்கப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அமெரிக்க கைதிகளை நரகத்திற்கு அனுப்பும் திட்டம்

east tamil

மொஸ்கோவில் குண்டு வெடிப்பு : 4 பேர் பலி

east tamil

“Nudeify AI” தொழில்நுட்பங்களுக்கு தடையுத்தரவு

east tamil

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்

east tamil

சூடானில் 54 பேர் பலி

east tamil

Leave a Comment