விஜய் டிவியில் சமீபகாலமாக புதிய ஷோக்களை அதிகம் அறிமுகப்படுத்தி வருகிறது. பிக் பாஸ் போட்டியாளர்களை வைத்து BB ஜோடிகள் என்ற புது ஷோ உருவாக்கப்பட்டு உள்ளது. முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் ஜோடிகளாக பிரிந்து நடனத்தில் போட்டி போட்டு வருகின்றனர்.
மேலும் காமெடி ராஜா, கலக்கல் ராணி என்ற புது ஷோவும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. அதில் விஜய் டிவி காமெடியன்களுக்கு ஜோடியாக பிரபல சீரியல் நடிகைகளை ஜோடியாக கொண்டு வந்து காமெடி செய்ய வைத்து வருகின்றனர்.
குக் வித் கோமாளியில் ஜோடியாக இருந்து வந்த பாலா மற்றும் ரித்திகா இருவரும் இந்த ஷோவிலும் ஜோடி சேர்ந்து இருக்கின்றனர். முதல் எபிசோடு மட்டுமே ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில் ரித்திகா ஷோ பற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.
இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்டட் ஷோ என விஜய் டிவி பற்றிய உண்மையை அவர் கூறி உள்ளார். அது பற்றி அவர் கூறி இருப்பதாவது..
“நீங்கள் முதல் எபிசோடை ரசித்து பார்த்திருப்பீர்கள் என நம்புகிறேன். ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட ஒரு காமெடி ஷோவில் நான் முதல் முறையாக பங்கேற்று இருக்கிறேன். அதனால் டிவியில் பார்க்கும் எதையும் நீங்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நீங்கள் பார்ப்பது எடிட் செய்யப்பட்ட வீடியோ.”
“நானும் பாலாவும் அனைத்தை பற்றியும் பேசுவோம். திட்டமிட்டு இந்த ஸ்கிட்டை நடித்து காட்டுவோம். அதனால் எங்கள் ஜோடிக்கு ஆதரவு அளியுங்கள். என்னை பிடித்தவர்களுக்கு நன்றி, ஆனால் இந்த விஷயம் புரியாமல் எனக்கு நெகடிவ் கமெண்ட் கொடுப்பவர்களுக்கு நான் சொல்வது ஒன்றுதான். கமான் மக்களே, இது வெறும் ரீல் ஷோ. நிஜ வாழ்க்கை இல்லை. பாசிட்டிவிட்டியை பரப்புங்கள்” என ரித்திகா கூறி இருக்கிறார்.
இப்படி ஒரு பதிவை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவியில் வரும் ஷோக்கள் ஸ்கிரிப்ட் செய்யப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தானே. இந்த உண்மையை என் இப்போது சொல்கிறீர்கள் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.