சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருபவர் நடிகை தீபா. இவர் சமீபத்தில் நடந்த குக் வித் கோமாளி சீசன் 2விலும் கலந்து கொண்டார்.
மேலும் தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து வரும் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் கலந்துகொண்டுள்ளார்.
இதில் கடந்த வாரம் நடந்த மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை அனைவருடனும் பகிர்ந்துகொண்டார்.
” நான் திருமணமான அடுத்த நாள் என் படுக்கையிலேயே சிறுநீர் போனேன்.ஆனால் அதனை என் மாமனார் பெரிய மனதுடன் எனக்காக சுத்தம் செய்து யாரிடமும் சொல்லாமலும் இருந்தார். அதே போல் தான் எனது வாழ்க்கையில் நடந்த ஒவ்வொரு விஷயத்திற்கு என் கணவரும், என் குடும்பமும் தான் உறுதுணையாக இருந்தார்கள்.
என் கணவரையும் பல பேர் தவறாக பேசியுள்ளார்கள். ஆனால் அவர் எனக்காக மட்டுமே வாழ்ந்துகொண்டு, என்னை மேலும் மேலும் திரையுலகில் வளரவைக்க தன்னுடைய மல்லிகை கடையை முடினார் ” என்று கண்கலங்கி பேசினார் நடிகை தீபா.