கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 கொவிட் தொற்றாளர்கள்

Date:

கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேலும் 26 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் பதிவான தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணியவர்களே புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

நேற்று (25) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகளுக்கு அமையவே புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை கிரேட்வெஸ்டன் தோட்டத்தில் எண்மரும், கொட்டகலை வூட்டன் தோட்டத்தில் 8 பேரும் ஏனைய தொற்றாளர்கள் தலவாக்கலை, வட்டகொட, போகாவத்தை, ரொசிட்ட வீட்டு திட்டம், திம்புளை – பத்தனை ஆகிய பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

26 தொற்றாளர்களையும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

–க.கிஷாந்தன்-

spot_imgspot_img

More like this
Related

இலங்கையில் நாடளாவிய மின்வெட்டு! மின்சார விநியோகத்தை மீளமைக்கும் பணிகள் தீவிரம்

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (17) மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேசிய...

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்