கொரோனா வைரஸின் டெல்டா மாறுபாட்டுடன் (.இந்தியாவில் கண்டறியப்பட்டது) கஹதுடுவ, ஜெயலியகமவில் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பில் கட்டுமான நிறுவனமொன்றில் பணியாற்றும், 47 வயதுடைய ஒருவரே தொற்றிற்குள்ளாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட நபர் பொலனருவையில் உள்ள கோவிட் சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் தனது பணியிடத்திலிருந்து வைரஸ் தொற்றிற்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபரின் தாய், மனைவி மற்றும் மகன் உட்பட 50 குடும்பங்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் ஜெயலியகமவிலும் அதைச் சுற்றியும் நடமாட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1