கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த லோகேஷ் கனகராஜ்!

Date:

மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார்.

நடிகர் கமலின் 232-வது படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அதேபோல் நடிகர் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

கமலின் ‘விக்ரம்’ படத்தில் இணைந்த ‘கைதி’ பட பிரபலம்

இந்நிலையில், பிரபல நடிகர் நரேன், விக்ரம் படத்தில் இணைந்துள்ளார். இதன்மூலம், கமல்ஹாசனுடன் நடிக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். நடிகர் நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் 2-வது படம் இதுவாகும். அவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

spot_imgspot_img

More like this
Related

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...

அனோஜனின் உயிரைக் காக்கப் பொதுமன்னிப்பு வழங்குங்கள்- சிவசரி பத்மநிலோஜன் குருக்கள் உருக்கமான வேண்டுகோள்

சமூக வலைத்தளப் பதிவொன்று தொடர்பாகச் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு மரண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்