நடிகர் சந்தானம் காமெடியில் கலக்கியுள்ள ‘சபாபதி’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா காமெடியனாக அறிமுகமாகி, தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் நடிகர் சந்தானம். அவர் படங்கள் பெரும்பாலும் காமெடி ஜானரில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. டைம்மிங் காமெடியில் கலக்கி வரும் சந்தானம் நடிப்பில் மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
இந்த படங்களில் அறிமுக இயக்குனர் சீனிவாசராவ் இயக்கியுள்ள படம் ‘சபாபதி’. அந்த காலத்து திரைப்படத்தின் பெயரில் உருவாகியுள்ள இப்படத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில் சாயாஜி ஷிண்டே, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை கடந்த ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய சந்தானம் முடிவு செய்திருந்தார். ஆனால் கொரானா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திட்டமிட்டப்படி படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இந்நிலையில் ‘சபாபதி’ படத்தை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளது. அதற்காக சோனி லைவ் நிறுவனத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாடு ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த படத்தை அடுத்த மாதம் ஓடிடியில் வெளியிடவுள்ளனர் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது