26.3 C
Jaffna
January 10, 2025
Pagetamil
இலங்கை

கொரோனா தொற்றிற்குள்ளான குடும்பத்தினரை வீட்டில் வைத்தே சிகிச்சையளித்த யாழ் வைத்தியர்: வைத்தியசாலை உபகரணங்களை வீட்டுக்கு கொண்டு சென்றார்!

யாழ்ப்பாணத்தில் வைத்தியர் ஒருவர் தமது பெற்றோர் உட்டபட்ட நெருங்கிய உறவினர்களுக்கு அன்ரிஜன் பரிசோதனையை வீட்டிலேயே மேற்கொண்டதுடன், அவர்களுக்கு வீட்டில் வைத்து சிகிச்சை அளித்தமை அம்பலமாகியுள்ளது.

குறித்த வைத்தியர் கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலகர் பிரிவில் உள்ள சுற்றயல் மருத்துவமனை ஒன்றில் தற்காலிக இணைப்பில் பணியாற்றி வருகிறார்.

சுகாதார திணைக்களத்தினால் மருத்துவமனைக்கு வரும்
நோயாளர்களை அவசியம் ஏற்படின் பரிசோதிப்பதற்கு வழங்கிய அன்ரிஐன் பரிசோதனை கருவிகளை தமது வீட்டிற்கே எடுத்துச் சென்று அவர் பரிசோதனைகளை மேற்கொண்டபோது வீட்டில் உள்ளவர்கள் தொற்றுக்கு உள்ளாகியமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இது குறித்து எவருக்கும் அறிவிக்காது அவர்களை தமது வீட்டிலேயே வைத்திருந்ததுடன் வீட்டிற்கு ஒட்சிசன் சிலிண்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை தாம் கடமைபுரியும் வைத்தியசாலையிலிருந்து கொண்டு சென்று சிகிச்சை வழங்கியுள்ளாராம்.

குறித்த வைத்தியர் குறித்து இதற்கு முன்னரும் பல்வேறு குற்றச்சாட்டுகள் மாவட்ட சுகாதாரதுறையினரால் முன்வைக்கப்பட்டும் அவை எவற்றிற்கும் உரிய
நடவடிக்கை மாகாண சுகாதாரத் திணைக்களத்தினரால் எடுக்கப்பட்டிருக்கவில்லை எனத் தெரியவருகிறது.

குறிப்பாக எல்லைக் கிராமம் ஒன்றில் உள்ள ஆதார வைத்தியசாலையில் இவர் கடமையாற்றியபோது உரிய அனுமதி பெறாது வெளிநாடு சென்றமை, தாம் கடமையில்
இருக்காத (வெளிநாடு சென்ற, மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் இரவுநேரக் கடமை செய்த) காலப்பகுதிக்கும் சேர்த்து மேலதிக வேலைக் கொடுப்பனவினைப் பெற்றமை, வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவிற்கான
துண்டுச் சிட்டைகளை தமது தனியார் சிகிச்சை நிலையத்தில் கட்டணம் பெற்று வழங்கியமை எனப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது உள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

நாட்டு நலனுக்காக மாற்றியமைக்கப்பட்ட 77வது சுதந்திர தினம்

east tamil

சாணக்கியனுக்கு பதவி உயர்வு

east tamil

9 மாத சிறை: நீதிமன்றத்துக்குள் ரகளை செய்த ஞானசாரர்!

Pagetamil

ஊடகங்களில் பரவும் போலிச் செய்தி!

Pagetamil

குகதாசன் கண்டனம்

east tamil

Leave a Comment