அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவுகளை ஆரம்பித்து விட்மோம். கைலாசாவிற்கான தூதரகம் வோஷிங்டன் டிசியில் திறக்கப்பட்டு விட்டது என புதிய குண்டை போட்டுள்ளார் சுவாமி நித்தியானந்தா.
இந்தியாவில் வழக்கு விசாரணைகளிலிருந்து தப்பிக்க, தலைமறைவான சுவாமி நித்தியானந்தா, கைலாசா என்ற தனித்தீவில் இந்து ராஜ்ஜியத்தை உருவாக்கி விட்டதாக அறிவித்தார்.
அந்த நாட்டின் தலைவர் அவர்தான். நாட்டின் கொடி, குடை, ஆலவட்டம், சின்னம் என பலதையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் இந்த தலைமறைவு சாமியார்.
அத்துடன், இந்தியாவிலிருந்ததை போலவே, வெரைட்டி வெரைட்டியான சுற்றிவர வைத்துக் கொண்டு ஆன்மீகத்தில் திளைத்து வந்தார்.
அடிக்கடி பற்ற வைக்கும் நித்தியானந்தா சில காலமாக சத்தமின்றி இருந்தார். இதனால் ரசிகர்கள் வெறுப்படைந்திருந்த நிலையில், நித்தி அதகளப்படுத்திக் கொண்டு வந்துள்ளார்.
உலகளவில் நாடொன்றை அங்கீகரிக்க தேவையான அடிப்படை விடயங்கள் நான்கையும் கைலாசா கொண்டுள்ளதாக தெரிவித்தார். நிலம், மக்கள் தொகை, அரசியலமைப்பு, நாடுகளிடையேயான இராஜதந்திர உறவு என்பன தேவையாக இருந்த நிலையில், இதுவரை ராஜதந்திர உறவு மட்டுமே மலராமல் இருந்ததாகவும், அமெரிக்காவுடன் உறவு மலர்ந்ததன் மூலம் அந்த குறையும் தீர்ந்து, இப்பொழுது கைலாசா முழுமையான தகைமையுடைய நாடு என தெரிவித்துள்ளார்.
போதாதற்கு, விரைவில் அமெரிக்காவிற்கு விஜயம் செய்யப் போவதாக வேறு தெரிவித்துள்ளார்.