25 C
Jaffna
January 22, 2025
Pagetamil
இந்தியா

தமிழ் மொழியின் ரசிகன் நான்: பிரதமர் மோடி பேச்சு!

உலகின் பழமையான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்றும் நாட்டு மக்களிடையே மான் கி பாத் எனும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில், இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையான இன்று வானொலி நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகின் பழமையான மொழியான தமிழ் மொழி மற்றும் தமிழ் கலாசாரத்தின் அபிமானி நான். தமிழ் மீதான என் அன்பு என்றும் மாறாதது. பழமையான தமிழ் மொழி இந்தியாவுக்கு சொந்தமானது. இந்தியர்கள் அனைவரும் இதை எண்ணி பெருமைகொள்ள வேண்டும். தமிழ் மொழியை எண்ணி நான் எப்போதும் பெருமிதமும் கர்வமும் கொள்கிறேன்” என்றார்.

கொரோனாவுக்கு எதிராகப் போராடி நாம் ஒரு அசாதாரண மைல்கல்லை அடைந்துள்ளோம். ஜூன் 21ஆம் தேதியன்று புதிய தடுப்பூசி இயக்கம் தொடங்கியது. ஒரு நாளில் 86 லட்சத்திற்கும் அதிகமானோர் இலவச தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தப்பட்டது. தயவுசெய்து தடுப்பூசிகள் தொடர்பான எதிர்மறையான வதந்திகளை நம்ப வேண்டாம். அப்படியே வதந்திகளை பரப்பினாலும் நாம் தடுப்பூசி போட்டுக்கொள்வதை அனைவரிடமும் வலியுறுத்துவோம். தடுப்பூசி பயத்திலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

மில்கா சிங் குடும்பம் முழுவதுமே விளையாட்டில் அர்ப்பணிப்பு உடையது. அவர் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார் என்று மில்கா சிங் குறித்து நினைவு கூர்ந்த பிரதமர் மோடி, நாட்டு மக்கள் அனைவரும் ஒலிம்பிக்கிற்குச் செல்லும் வீரர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் மக்கள் தடுப்பூசி போடுவதிலும், கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அப்போது பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘எல்லை தாண்டி செல்ல வேண்டாம்’ – தமிழக மீனவர்களுக்கு மீன்வளத் துறை அறிவுரை

Pagetamil

மருதங்கேணி பொலிஸாரால் சற்றுமுன் இரண்டு பெண்கள் கைது: மேலும் இருவருக்கு அழைப்பு

east tamil

ஆசிரியரின் ஆபாச பேச்சால் தற்கொலைக்கு முயன்ற 10ம் வகுப்பு மாணவி

east tamil

மாணவியை மிரட்டி நிர்வாண வீடியோ எடுத்த மாணவர்கள் கேரளாவில் கொடூரம்

east tamil

“விமான நிலையம் வேண்டாம் என்று கூறவில்லை, ஆனால்” – பரந்தூரில் விஜய் பேசியது என்ன?

Pagetamil

Leave a Comment