எந்தவொரு தடுப்பூசியின் ஒரு டோஸூம் கொரோனா வைரஸ் டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக 33% நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுமே வழங்கும் என்பதை சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறையின் பகுப்பாய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
உலகளாவிய தொற்றுநோய்க்கு காரணமான ஒரு வைரஸுக்கு எதிரான கணிசமான பாதுகாப்பு சதவீதம் இது அல்ல என்று அந்த துறையின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர கூறினார்.
அதன்படி, தடுப்பூசியின் ஒரு டோஸ் எதிர்பார்த்தபடி பாதுகாப்பை வழங்காது என்று கூறினார்.
அதேவேளை, இலங்கையில் உள்ள அனைத்து தடுப்பூசிகளும் B117 COVID-19 அல்பா வைரஸ் மாறுபாட்டிற்கு எதிரான சாதகமான விளைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1