விமானத்தில் இருந்து திடீரென வெளியே குதித்த பயணி -லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் பரபரப்பு!

Date:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த பயணி ஒருவர், திடீரென அவசரகால வாசல் வழியாக குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வெள்ளிக்கிழமை, சால்ட் லேக் நகருக்கு புறப்பட்ட யுனைடெட் எக்ஸ்பிரஸ் விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாதுகாப்பு சோதனைகள் முடிந்து, விமானத்தில் பயணிகள் ஏறி அமர்ந்ததும், ஒடுபாதையை நோக்கி விமானம் சென்றுகொண்டிருந்தது. அப்போது, உள்ளே இருந்த ஒரு பயணி திடீரென விமானத்தின் அவசர கால வாசல் கதவை திறந்து அதன் வழியாக வெளியே குதித்துள்ளார். இதனைக் கவனித்த பைலட், உடனடியாக விமானத்தை நிறுத்தினார்.

கீழே குதித்த நபருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விமானம் டாக்சிவேயில் இருந்து மீண்டும் முனையத்திற்கு திரும்பியது.

அந்த பயணி அவசரகால கதவு வழியாக விமானத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, காக்பிட் கதவை பலமாக தட்டியதாக விமான ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாகவும், கீழே குதித்த பயணியின் நோக்கம் குறித்தும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் விமானத்தில் பயணிகளின் அத்துமீறல் மற்றும் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 3000 சம்பவங்கள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

spot_imgspot_img

More like this
Related

சிறைகளில் மதத் தலைவர்களின் நிலைகண்டு வெம்பியிருக்கிறேன் – அநுர ஜனாதிபதிக்கு நினைவுபடுத்திய டக்ளஸ்

அனைத்து மதங்களின் தலைவர்களும் சிறைச்சாலைகளில் கௌரவமாக நடாத்தப்படுவதை சட்டத்தின் ஊடாக உறுதிப்படுத்த...

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமை சகோதரத்துவ நம்பிக்கையை வலுப்படுத்துகிறது – காரைதீவு தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு...

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்