Pagetamil
சினிமா

விஜய் படத்தைக் கிண்டல் செய்த சந்தீப் கிஷன்: மீம்ஸ்களுக்கு பதிலடி!

விஜய் தொடர்பான தனது பதிவுகள் தொடர்பான மீம்ஸ்களுக்கு சந்தீப் கிஷன் பதிலடிக் கொடுத்துள்ளார்.

ட்விட்டர் தளத்தில் பழைய பதிவுகளை முன்வைத்து பலரும் சிக்கலில் மாட்டிக் கொள்வது சகஜம். அப்படியொரு சிக்கலில் தற்போது மாட்டியுள்ளார் சந்தீப் கிஷன். விஜய்யை வைத்து இவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவுகளை வைத்து மீம்ஸ்களை உருவாக்கியுள்ளனர் நெட்டிசன்கள்.

சுறா’ படம் வெளியான போது, அந்தப் படத்தை கிண்டல் செய்து பதிவுகளை வெளியிட்டு இருந்தார் சந்தீப் கிஷன். அதற்குப் பிறகு சில ஆண்டுகள் கழித்து விஜய்யின் பிறந்த நாளுக்குப் புகழ்ந்து ட்வீட் செய்திருந்தார். இந்த இரண்டையும் முன்வைத்து தான் மீம்ஸ்களை உருவாக்கி வெளியிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

இந்த மீம்ஸுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் சந்தீப் கிஷன் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“இதை நான் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை.. ஆனால் என்னுடைய வார்த்தைகளை நான் மறுபரிசீலனை செய்ய ஒரு சில கணங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

இந்தப் பதிவை எடுத்து வைத்துக் கொண்டு என்னிடம் எப்போது வேண்டுமானால் கேளுங்கள். அப்போதும் நான் இந்த கருத்தில் தான் உறுதியாக இருப்பேன்.

 

எனக்கு விஜய் சாரை மிகவும் பிடிக்கும். அவர் பல கடினமான தருணங்களில் என்னை பலவழிகளில் ஊக்கப்படுத்தியுள்ளார். இதில் வெட்கப்பட ஏதுமில்லை. விஜய் சார் படங்களை ரசித்தே நான் வளர்ந்தேன். இடைப்பட்ட காலங்களில் ஒரு வழக்கமான சினிமா ரசிகனாக தொலைந்து போனேன். ஆனால் இன்று கடந்த 10 ஆண்டுகளாக அவருடைய பயணம் எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தை அளித்தது என்று பெருமையுடன் சொல்வேன். இன்று நான் அவருடைய மிகப்பெரிய ரசிகனாக இருக்கிறேன்”

இவ்வாறு சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார்.

 

இதையும் படியுங்கள்

முந்தைய அஜித் படங்களின் வசூலை முறியடிக்குமா ‘குட் பேட் அக்லி’?

Pagetamil

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

குடும்ப வன்முறை வழக்கை ரத்து செய்ய கோரி ஹன்சிகா மனு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!