உலகையே கொந்தளிக்க வைத்த கருப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் மரணம் தொடர்பான விசாரணையில், குற்றவாளியான பொலிஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், ஜார் பிளாய்ட்டின் மகள் தன்னுடைய தந்தையை எந்த அளவிற்கு மிஸ் செய்கிறாள் என்பதை நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் மினியாபோலிசில் கடந்த ஆண்டும் மே மாதம் 25-ஆம் திகதி ஜார்ஜ் பிளாய்டு(46) என்ற கறுப்பினத்தவர், கடை ஒன்றில் கள்ள நோட்டு கொடுக்க முயன்றதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின், அவரின் கைகளை பின்பக்கமாக கட்டி, கீழே வீழ்த்தினர். அதில், ஒரு பொலிஸ் அதிகாரி, பிளாய்டின் கழுத்தின் மீது, தன் கால் முட்டிகளால் நெருக்கியதால், ஜார்பிளாய்ட் மூச்சுவிட முடியாமல், உயிரிழந்தார்.
இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்பட்டதால், இந்த வீடியோவைக் கண்ட உலக மக்கள் பலரும் தங்கள் ஆதரவை ஜார்ஜ் பிளாய்ட்டுக்கு தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி அந்த பொலிசாருக்கு விரைவில் தண்டனை கொடுக்க வேண்டும் என்று பிரித்தானியா, போன்ற பல நாடுகளில் போராட்டம் எல்லாம் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தொடர்ந்து, நேற்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது. அதில், பொலிஸ் அதிகாரியான டெரக் சாவ்விற்கு 22 ஆண்டுகள் 6 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனை அறிவிப்பிற்கு முன்னர் ஜார்ஜ் பிளாய்ட்டின் 7 வயது மகள் தன்னுடைய அப்பாவைப் பற்றி பேசியிருந் வீடியோ போட்டு காட்டப்பட்டது.
அவர் தன்னுடைய அப்பாவை எந்த அளவிற்கு மிஸ் செய்கிறார் என்பதைப் பற்றி கூறினார். தனது அப்பாவுடன் நேரத்தை செலவிடுவதையும் அவருடன் விளையாடும் நாட்களை இழந்து நிற்பதாகவும், நான் அவரைப் பற்றி இப்போது வரை கேட்டு கொண்டு தான் இருக்கிறேன். என் அப்பாவிற்கு எப்படி காயமடைந்தது, நான் அவருடன் விளையாட விரும்புகிறேன்.
வேடிக்கையாக இருக்க வேண்டும், விளையாட்டு மைதானத்திற்கு செல்ல வேண்டும், நாங்கள் தூங்க செல்வதற்கு முன்பு ஒவ்வொரு இரவும் ஒன்றாகவே சேர்ந்து உணவு உட்கொள்வோம், அதுமட்டுமின்றி என் அப்பா எனக்கு பல் துலக்க உதவுவார்.
ஆனால், அது எல்லாம் இப்போது இல்லை, அந்த தருணங்களை எல்லாம் தவறவிட்டுவிட்டேன் என்று கூறியுள்ளார். மீண்டும் அப்பாவை பார்க்க முடிந்தால், நாங்கள் உங்களை இழந்து நிற்கிறேன், உங்களை காதலிக்கிறேன் என்று சொல்வேன் என அவர் தெரிவித்துள்ளார்.