உதவியாளருக்கு கொடுத்த முத்தத்தால் வினை: அமைச்சு பதவியும் போனது; மனைவியும் பிரிந்தார்!

Date:

கோவிட் விதிகளை மீறியதற்காக பிரித்தானியாவின் சுகாதார அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் மட் ஹான்காக். இதேவேளை அவரது மனைவியும் அவரை விட்டு பிரிந்துள்ளார்.

சுகாதாரத் துறையின் லண்டன் தலைமையகத்தில் தனது உதவியாளர் ஜினா கொலடங்கேலோவை முத்தமிடும் சிசிரிவி காட்சிகள் வெளியானதை தொடர்ந்து, இந்த புதிய நிலைமைகள் உருவாகின.

சி.சி.டி.வி காட்சிகளைப் பெற்றதாக த சன் பத்திரிகைக்குத் தெரிவித்தபின், ஹான்காக் வியாழக்கிழமை இரவு தனத வீட்டிற்கு ஓடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தை பற்றி மனைவி மார்த்தாவுக்கு அவர் அறிவித்தார். எனினும், இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அவர், சுகாதார அமைச்சரை விட்டு பிரிந்து விட்டார்.

ஹான்காக் தம்பதியின் திருமண வாழ்க்கை 15 ஆண்டுகளில் முடிவடைகிறது.

ஹான்காக் (42) இன்று தனது சஃபோல்க் தொகுதி வீட்டில் இருந்தார், 44 வயதான மார்த்தா லண்டனில் உள்ள குடும்ப வீட்டில் இருந்தார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை மீறி தனது அமைச்சு அலுவலகத்தில் ஒரு உதவியாளரை முத்தமிட்ட வீடியோ காட்சிகள் வெளிவந்த மறுநாளே அவர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஹான்காக் இப்போது கொலடாங்கெலோவுடன் ஒரு உறவில் இருப்பதாக ஸ்கை நியூஸ் தெரிவித்துள்ளது,

மார்த்தா ஹான்காக்

1990 களின் பிற்பகுதியில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது.

கொலடாங்கெலோவின் கணவர் ஒலிவர் ட்ரெஸ், மனைவியின் இரகசிய உறவு குறித்து இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

“வழிகாட்டுதலை மீறியதற்காக எனது மன்னிப்பை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், மேலும் எனது குடும்பத்தினரிடமும் அன்பானவர்களிடமும் மன்னிப்புக் கேட்க விரும்புகிறேன். இந்த நேரத்தில் நான் எனது குழந்தைகளுடன் இருக்க வேண்டும்.” என மட் ஹான்காக் கூறினார்:

ஜினா கொலடங்கேலோ கணவனுடன்

ஹான்காக் சனிக்கிழமை மாலை தனது ராஜினாமாவை அறிவித்தார் . முன்னாள்  உள்துறை அமைச்சர் சஜித் ஜாவிட்,  புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று டவுனிங் தெரு அறிவித்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நடு வீதியில் வாளுடன் அட்டகாசம் செய்த 3 பேருக்கு விளக்கமறியல்

திவுலபிட்டிய நகரில் பேருந்து ஓட்டுநர் மீது வாளால் தாக்குதல் நடத்த முயன்ற...

நீதிபதிகள் ஓய்வு வயது சர்ச்சை: ஜனாதிபதி- சட்டத்தரணிகள் சந்திப்பு சர்ச்சை!

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட...

இந்தியாவின் 80வது சுதந்திரதினம்

இந்தியாவின் 80வது சுதந்திர தினமான இன்றைய தினம் சனிக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்