தங்கல்ல, நாகுலுகமுவ பகுதியில் உள்ள வீடொன்றின் பின்னால் புதைத்து வைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாக்கி ஒன்று மற்றும் அதற்கான தோட்டாக்கள் 13 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுபுன் புத்திக எனும் வலஸ்கல சுபுன் என்பவரின் தோட்டத்திற்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றிலேயே குறித்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வலஸ்கல்ல சுபுன் என்பவர் 2018 ஆம் ஆண்டு நால்வரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தி விட்டு மறைத்து வைத்திருந்த துப்பாக்கியையே மீட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1