பலருக்கு அருமையான குடும்பம், மனைவி, குழந்தை அமைந்தும் வறுமையால் வாடும் சூழலில் வாழ்கின்றனர்.
செல்வததை தேடுபவராகவும், பொருள் ஈட்ட முயற்சிக்க பலரும் முயல்வார்கள். ஆடம்பரமாக வாழ பலர் நினைப்பார்கள். ஆனால் தில் சாத்தியமில்லாமல் வறுமையிலேயே வாடக்கூடிய ராசிகள் குறித்து பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசியினர் தாங்கள் ஆடம்பர வாழ்க்கை வாழ அதிக பணம் செலவிடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அதனால் அதிகளவில் ஆடம்பர பொருட்களையும், செலவுகளையும் செய்கின்றனர். பணத்தை மிச்சப்படுத்திச் சேமிக்க யோசிப்பதில்லை. இதனால் நீண்ட காலம் இவர்களின் ஆடம்பர வாழ்க்கை நிலைப்பதில்லை. விரைவில் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப நேரிடுகிறது.
சிம்மம்
சிம்ம ராசியினர் ஆளுமை திறன் நிறைந்தவர்கள். இவர்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ள அதிகளவில் பணம் செலவிட தயங்குவதில்லை. மிதமிஞ்சிய பணத்தை தவறான விஷயங்களுக்கும், ஆடம்பர வாழ்விற்கும் செலவிடுவதால் சொகுசாக வாழ முடியும் என நம்புகின்றனர்.
சேமிக்கும் எண்ணம் மறக்கும் போது அவர்களின் வாழ்க்கையில் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியினர் செலவைப் பற்றி அவ்வளவாக கவலைப்படாமல் விலை உயர்ந்த பொருட்களை வாங்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். எத்திரிகாலத்திற்காகச் சேமிக்கும் எண்ணம் குறைவாக கொண்டவர்கள். சுக போகமாக வாழ விரும்புபவர்களாக இருக்கின்றனர். அதிகம் செலவு செய்யும் பழக்கத்தால் அவர்கள் நினைத்தபடி அதிக நாட்கள் ஆடம்பரத்துடன் வாழ முடியாமல் போகும்.
விருச்சிகம்
ஜோதிடத்தின்படி விருச்சிக ராசியினர் பணத்தை செலவிட தயக்கம் காட்டுவதில்லை. இவர்கள் பல நேரம் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் பணத்தை தண்ணீராக செலவிடுகிறார்கள். எதிர்காலத்திற்காக பெரியளவில் சேமிக்க விரும்புவதில்லை. இவர்கள் தங்களின் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், உணவுக்காகவும் அதிக பணம் செலவிடுகிறார்கள். மேலும் சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள்.