வாய்வுத் தொல்லை வராமல் தடுக்கும் சட்னி!

Date:

உணவில் சேர்த்துக்கொள்ளும் இஞ்சி, பூண்டு உணவு செரிமானமாக உதவுகிறது. வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லைகள் போன்றவை வராமல் தடுக்கிறது.

தேவையான பொருட்கள்

பூண்டு – 12 பற்கள்

இஞ்சி – அரை கப்
காய்ந்த மிளகாய் – 10
உப்பு மற்றும் எண்ணெய் – தேவையான அளவு
புளி – நெல்லிக்காய் அளவு
வெல்லத்துருவல் – அரை டீஸ்பூன்
கடுகு மற்றும் உளுந்து – தலா 1 டீஸ்பூன்

செய்முறை

வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு, மிளகாய் போட்டு வதக்கவும்.

இத்துடன் உப்பு, புளி சேர்த்து வதக்கி ஆறவிடவும்.

வதக்கிய பொருட்களுடன் சிறிது நீர், வெல்லத்துருவல் சேர்த்து மிக்சியில் அரைத்து கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து சேர்க்கவும்.

காரசாரமான பூண்டு இஞ்சி மிளகாய் சட்னி ரெடி.

spot_imgspot_img

More like this
Related

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...

நாளை சில பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில்

முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்