ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் உள்ளவர்களிற்கு இலங்கையிலிருந்து பார்சல் போடுபவர்கள் கவனத்திற்கு!

Date:

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அனுப்பப்படும் கடிதம் தவிர்ந்த ஏனைய அஞ்சல் பொருட்களுக்கான வரிக் கொள்கை எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் திருத்தப்பட உள்ளது.

திருத்தப்பட்ட வரிக் கொள்கையின்படி, 150 யூரோக்களுக்கும் குறைவான அனைத்து அஞ்சல் தொகுப்புகளையும் அனுப்புபவர் வட் வரி செலுத்த வேண்டும்.

150 யூரோக்களைத் தாண்டிய அஞ்சல் தொகுப்புகளின் அனைத்து வரிகளையும் நாடுகளின் சுங்கம் பெறுநரிடமிருந்து சேகரிக்கும்.

இலங்கையில் வசிக்கும் ஒருவரிடமிருந்து எந்த ஐரோப்பிய ஒன்றிய நாட்டிலும் வசிக்கும் ஒருவருக்கு.அனுப்பப்படும் தனிப்பட்ட பரிசு அடங்கிய அஞ்சல் தொகுப்புகளுக்கும் இந்த வரி பொருந்தும்.

அஞ்சல் பொருட்களைப் பெறுபவர்கள் தொடர்புடைய வட் மற்றும் எல்லை வரி செலுத்த மறுத்தால் அதற்கு தாம் பொறுப்பேற்க மாட்டோம் என்று அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலதிக தகவல்களை 0112 320 017 என்ற எண்ணில் தபால் திணைக்களத்திலிருந்து பெறலாம்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட மூலத்தை எதிர்த்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில்  பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை தேசிய மக்கள் சக்தி...

ஒரே கிளிக்கில் பரீட்சைத் தரவுகள்: தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய டிஜிட்டல் முயற்சி

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரிப் பட்டப்படிப்புகள் மற்றும் தொழில்சார் கற்கைகள் நிலையத்தின் (CEDPL)...

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்