24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இந்தியா

பாம்பன் மீன் பிடி விசைப்படகு மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு: பாதிக்கபட்ட மீனவர்களிடம் மீன் வளத்துறை அதிகாரிகள் விசாரணை

நேற்று காலை பாம்பனில் இருந்து நூற்றுக்கும் அதிகமான மீன்பிடி விசைப் படகில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்கள் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் கைது செய்வோம் என ஒலிபெருக்கி மூலமாக பாம்பன் மீனவர்களை எச்சரித்துள்ளனர். இதனை அடுத்த பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் கைது நடவடிககைக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினர்.

இந்நிலையில் பாம்பனை சேர்ந்த லிம்பர்ட் மற்றும் காலின்ஸ், தங்கச்சி மடத்தைச் சேர்ந்த கிருபை ஆகியோருக்கு சொந்தமான மூன்று படகுகள் மீது இலங்கை கடற்படையினர் இலங்கை கடற்படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில்; மூன்று விசைப்படகுகள் மீன் பிடித்து கொண்டிருந்த 20க்கும் அதிகமான மீனவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அங்கிருந்து பாம்பன் நோக்கி வந்தனர்.

இதனால் மீனவர்களுக்கு சுமார் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கபட்ட விசைப்படகு உரிமையாளர் லிம்பர்ட்யிடம் ராமேஸ்வரம் மீன் வளத்துறை மீன்வளத்துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மீன் பிடி தடைகாலம் முடிந்து பாம்பன் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க மூன்று முறை கடலுக்கு சென்றுள்ளனர்.மூன்று முறையும் இலங்கை கடற்படை பாம்பன் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment