தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் அதர்வா, தற்போது புரட்சி வாலிபராக புதிய படத்தில் நடித்துள்ளார்.“குங்கும பூவும் கொஞ்சும் புறாவும், வானவராயன் வல்லவராயன்” படங்களை இயக்கிய ராஜமோகன் அடுத்தாக அட்ரஸ் என்னும் படத்தை இயக்கி இருக்கிறார்.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் இப்படத்தில் நடிகர் அதர்வா, புரட்சி வாலிபராக நடித்திருக்கிறார். காளி என்ற கதாபாத்திரத்தில் வரும் அதர்வா, நட்புக்காக சிறிய வேடத்தில் நடித்து கொடுத்திருக்கிறார்.
இப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பூஜா ஜாவேரி நடிக்கிறார். மேலும், இசக்கி பரத், புதுமுகம் தியா, தம்பிராமையா, தேவதர்ஷினி, ஏ.வெங்கடேஷ், மெட்ராஸ் நந்தகுமார், நாகேந்திரன், கோலி சோடா முத்து மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1