தமிழில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி ‘தொட்டா சிணுங்கி’ படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தவர் தேவயானி. அதன்பிறகு அஜித் நடிப்பில் வெளியான ‘காதல் கோட்டை’ படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி திரைப்படங்களில் நடித்து வந்த தேவயானிக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
சன் டிவி-யில் ஒளிபரப்பான கோலங்கள் சீரியல் மூலம் சீரியலுக்கு நுழைந்த தேவயானி, சினிமா போன்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இல்லத்தரசிகளின் ஆதரவோடு அடுத்தடுத்த சீரியல்களில் நடித்து வந்தார்.கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ சீரியலில் நடித்திருந்தார். இதன்பிறகு சீரியல்களில் நடிக்காமல் இருந்தார்.
பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘புதுப்புது அர்த்தங்கள்’ என்ற சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சீரியல் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பாகி வருகிறது. கொரானா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட இந்த சீரியலின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இந்நிலையில் நடிகை தேவயாணி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து ‘புதுப்புது அர்த்தங்கள்’ சீரியலில் நடித்து அவர், குழுவினரோடு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். சீரியல் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.