தன்னைப் பற்றி சிம்பு கூறிய பதிலுக்கு நடிகர் பிரேம்ஜி ரியாக்ட் செய்துள்ளார்.சில தினங்களுக்கு முன்பு ‘மாநாடு’ படத்தின் ப்ரோமோஷனுக்காக படக்குழுவினர் ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் உரையாடினர். அதில் சிம்பு, வெங்கட் பிரபு, யுவன், கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழில் அதிகம் பேர் கலந்துகொண்ட ட்விட்டர் ஸ்பேஸாகவும் அது இருந்தது.
அதில் கலந்துகொண்டு சிம்பு பேசிய போது தான் மது பழக்கத்தை நிறுத்தி ஒரு வருடம் ஆகிவிட்டதாகத் தெரிவித்தார். மேலும் பிரேம்ஜி மாதிரியான ஆட்கள் உடன் இருக்கும் போது மது பழக்கத்தை கைவிடுவது எவ்வளவு கடினம் என்றும் நகைச்சுவையாக பேசியுள்ளார். சிம்பு பிரேம்ஜி பற்றி பேசிய தகவல் இணையத்தில் வைரலாகியது. செய்தியாகவும் வெளியாகியது.
தற்போது பிரேம்ஜி அதற்கு பதிலளித்துள்ளார். சிம்பு தன்னைப் பற்றியது செய்தியாக வெளியான ஸ்க்ரீன்ஷாட்டைப் பகிர்ந்த பிரேம்ஜி நான் செவனேனு தான் போய்கிட்டிருந்தேன். யார் வம்பு தும்புக்காச்சு போனேனா என்ற டெம்ப்ளட்டைப் பகிர்ந்து நகைச்சுவையாக ரியாக்ட் செய்துள்ளார். பிரேம்ஜியின் இந்தப் பதில் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதற்கிடையில் பிரேம்ஜி தமிழ்ராக்கர்ஸ் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். சத்திய சோதனை என்ற படத்திலும் ஸ்பிரேம்ஜி கதாநாயகனாக நடித்துள்ளார். பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது. விரைவில் நல்ல செய்திக்காக காத்திருப்போம்!