25.1 C
Jaffna
January 14, 2025
Pagetamil
இந்தியா உலகம்

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவை நாடு கடத்தும் வழக்கில் நாளை நேரடி விசாரணை!

மும்பை தாக்குதல் குற்றவாளி ராணாவும் அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 அமெரிக்கர்கள் உள்பட 166 பேர் பலியானார்கள். இதில் முக்கிய குற்றவாளியான ஹெட்லி, அமெரிக்காவில் பிடிபட்டார். அவர் அப்ரூவராக மாறி, சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவருடைய நண்பரும், கனடா குடியுரிமை பெற்ற பாகிஸ்தான் தொழிலதிபருமான தஹாவுர் ராணாவுக்கும் இவ்வழக்கில் தொடர்புள்ளது. அவர் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் வேண்டுகோளின் பேரில், அமெரிக்காவில் ராணா கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், அதை எதிர்த்து அமெரிக்க உயர் நீதிமன்றத்தில்  ராணா வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில், நாளை (வியாழக்கிழமை) கோர்ட்டில் நேரடி விசாரணை நடைபெறுகிறது. இதையொட்டி, இந்திய அதிகாரிகள் அமெரிக்காவுக்கு போய் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஜப்பானில் வாடகை நண்பர் – கோடிகளில் சம்பளம்

east tamil

இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்?

Pagetamil

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் – இலங்கை அமைச்சர்கள் சந்திப்பு

east tamil

உயிருடன் சிக்கினால் தற்கொலை செய்யுங்கள் – கிம் ஜாங் உத்தரவால் அதிர்ச்சி

east tamil

இதுவரை 24 பேரை பலிகொண்ட லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத் தீ – உருவானதும் பரவியதும் எப்படி?

Pagetamil

Leave a Comment