களனி பட்டிய வீதியை சேர்ந்த பெண் ஒருவர் 100 கிராம் ஹெரோயின் மற்றும் 50,800 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றவியல் பிரிவின் மேல் மாகாண ஊழல் ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.
´குடு மங்களிகா´ என அழைக்கப்படும் களுபஹனகே மங்களிகா என்ற 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
100 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை 800 ஹெரோயின் பக்கட்டுக்களினுள் அடைத்து விற்பனைக்காக தயார் நிலையில் வைத்திருந்ததாகவும் அதன் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரான பெண் இன்று (23) புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
1
+1
+1
+1