கடா வெட்டி விருந்துண்ணும் அவதியில் கொரோனாவை மறந்தனர்; பருத்தித்துறையில் வேள்வியில் குவிந்தவர்களிற்கு நேர்ந்த கதி: ஆலய நிர்வாகி கைது!

Date:

அல்வாய் பகுதியில் கொரோனா கட்டுப்பாட்டை மீறி அதிகளவான மக்கள் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்றுகூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய விறுமர் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

அல்வாய் வடக்கு விருமார் கோயிலில் இன்று பொங்கல் மற்றும் வேள்வி நிகழ்வு 500 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடி கொரோனா கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்காமல் நடத்தியுள்ளனர்.

சுகாதார பகுதியினரின் அனுமதிகள் எதுவும் பெறப்படாது இவ்வாறு அதிக அளவான எண்ணிக்கையில் மக்களை ஒன்று கூட்டி கொரோனா பரவலுக்கு ஏதுவான நிலையைத் தோற்றுவித்தமைய் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடுத்து பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் பொது சுகாதார பரிசோதகர்களும் பருத்தித்துறை போலீசாரும் இணைந்து மேற்கொண்ட பரிசோதனையில் சட்ட விதிமுறைகளை மீறுவதற்கு காரணமாயிருந்த கோயில் நிர்வாகியும் அதனோடு இணைந்து செயல்பட்ட ஏனைய 30 பேரும் உடனடியாக சுய தனிமைப்படுத்தல் உட்படுத்தப்பட்ட தோடு, கோயில் நிர்வாகி மீது பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் போலீஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொது சுகாதார பரிசோதகர்களதும் பொலிசாரதும் கடமைக்கு இடையூறு விளைவித்து அச்சுறுத்தல் விடுத்த அப்பகுதி இளைஞர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

அவர் தொடர்பான வீடியோ மற்றும் போட்டோ ஆதாரங்களை கொண்டு அவரை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக போலீசார் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இவ்வாறு பொதுமக்கள் பொறுப்பற்ற விதமாக ஒன்றுகூடல் களை மேற்கொள்வதால் அதிகளவான நோய்த்தொற்று பரவல் ஏற்பட்டு தேவையற்ற இழப்புகளை சமூகம் எதிர்நோக்க வேண்டிவரும் என தெரிவிக்கப் படுகின்றது.

spot_imgspot_img

More like this
Related

கழிவு அகற்றும் உழவு இயந்திர பெட்டியில் பாதையாத்திரைகளுக்கான உணவு பொருட்கள் எடுத்துச் சென்ற வழங்கிய மட்டு மாநகர சபை

கதிர்காமம் புனித பாதை யாத்திரைகளுக்கு  காட்டுப்பகுதியில் செல்பவர்களுக்கு மட்டக்களப்பு மாநகரசபையின் குப்பை...

மியான்மர் கடற்கரையில் இரு அகதி படகுகள் மாயம்: 500-க்கும் மேற்பட்டோர் காணாமல் போனதாக ஐ.நா. தகவல்

மியான்மரில் நிலவும் வன்முறையிலிருந்து தப்பிச் சென்ற ரோஹிங்கியா அகதிகளை ஏற்றிச் சென்ற...

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்