25.7 C
Jaffna
December 28, 2024
Pagetamil
இலங்கை

கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு பெறுமதி வாய்ந்த Dialysis Machine நன்கொடை!

ஐக்கிய மக்கள் சக்தியின் ‘’எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் சஜித் பிரேமதாச அவர்களின் எண்ணக்கருவில் உருவானதும் நாடுபூராவும் நடைமுறைப்படுத்துவதுமான ‘ஜன சுவய’ கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகின்ற சமூக நலத்திட்டத்தின் 16வது கட்டமாக கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைக்கு இருபத்தி மூன்று இலட்சத்தி இருபது ஆயிரம் (23,20,000/-) ரூபா பெறுமதி வாய்ந்த Dialysis Machine (01) உபகரணம் நன்கொடையாக இன்று (22) வழங்கப்பட்டது.

எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவால் கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் சரவணபவன் அவர்களிடம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க, சிரேஷ்ட பிரதித் தலைவர் ராஜித சேனாரத்ன, வைத்தியர் காவிந்த ஜயவர்தன, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் த.சித்தார்தன், எம்.ஏ.சுமந்திரன், சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகிய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் ‘ஜன சுவய’ கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சுத் திட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

போக்குவரத்து விதிமீறல்: 383 சாரதிகள் மீது வழக்கு பதிவு

east tamil

‘மக்களுக்கு எதிராக செயற்பட்ட அரச அதிகாரிகளுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்’: அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

Pagetamil

மஹிந்தவின் வலது கையிடம் நேற்று: மகனிடம் 3ஆம் திகதி விசரணை!

Pagetamil

இலஞ்சம் வாங்கியபோது மாட்டிய முன்னாள் மாகாணசபை உறுப்பினருக்கு விளக்கமறியல்!

Pagetamil

மனுஷ நாணயக்காரவின் சகோதரர் கைது

Pagetamil

Leave a Comment