இன்று நடிகர் கவின் பிறந்தநாள் கொண்டாடுவதை அடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து பதிவுகளைப் பொழிந்து வருகின்றனர். இன்று நடிகர் விஜயின் பிறந்தநாள் என்பதால் கடந்த ஒரு வாரமாக சமூக வலைத்தளங்களை விஜய் ரசிகர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் நேற்று இரண்டு போஸ்டர்கள் வேறு வெளியாகியுள்ளதால் கேட்கவே வேண்டாம். எங்கு சென்றாலும் Beast Mode தான்.
இன்று நடிகர் கவினுக்கும் பிறந்தநாள். எனவே கவின் ரசிகர்கள் நாங்களும் உங்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் கவின் பிறந்தநாள் வாழ்த்து பதிவுகளால் அதிரச் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜயின் ரசிகர்களுக்கு கவின் ரசிகர்கள் டப் கொடுப்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இதன்மூலம் கவினுக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது தெரிகிறது.
சீரியல் மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள கவின் தற்போது வெள்ளித் திரையிலும் முன்னேறி வருகிறார். ‘நட்புனா என்னனு தெரியுமா’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் கவின். தற்போது ‘லிப்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்று கவின் பிறந்தநாள் என்பதால் லிஃப்ட் படத்திலிருந்து அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது