ஆண்டுதோறும் விஜய் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இதுவரை இந்த நிகழ்ச்சியின் 4 சீசன்கள் வெற்றிக்கரமாக முடிவடைந்துள்ளது. ஏற்கனவே ஆரவ், ரித்விகா, முகென் ராவ், ஆரி ஆகியோர் டைட்டில் வின்னராக தேர்தெடுக்கப்பட்டுள்ளனர். நடிகர் கமல் சுவாரஸ்யமாக வருடந்தோறும் விறுவிறுப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
வழக்கமான ஜூன் மாதத்தில் தொடங்கும் இந்நிகழ்ச்சி கடந்த ஆண்டு கொரானா வைரஸ் பரவல் காரணமாக அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிவுற்றது. இந்த ஆண்டு வழக்கமாக தொடங்கும் ஜூன் மாதமே தொடங்க திட்டம் வகுக்கப்பட்டது. அதற்கான பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததது. ஆனால் இந்த ஆண்டு கொரானாவின் இரண்டாம் அலை கடந்த ஆண்டை விட கொடூரமாக இருந்ததால் திட்டமிட்டப்படி தொடங்கவில்லை.
இதையடுத்து பிக்பாஸ் சீசன் 5வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் 5வது சீசன் எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் தற்போது தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதனால் அக்டோபரில் தொடங்குவது உறுதியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து போட்டியாளர்களை இறுதி செய்யும் பணிகளிலும் பிக்பாஸ் குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
இதேபோன்று இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் கமல் அரசியலில் பிசியாக இருப்பதால் தொகுத்து வழங்குவாரா என்ற சந்தேகம் இருந்தது. அதேநேரம் நடிகர் சிம்புவிடம் கூட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் நடிகர் கமல் தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 20 நாட்கள் கால்ஷூட்டையும் கொடுத்திருக்கிறார் கமல் என்ற தகவல் கசிந்துள்ளது. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர்.