சிலர் தங்கள் தவறை ஏற்றுக்கொண்டு மிகவும் வருந்துகிறார்கள். ஒவ்வொருவரும் மன்னிப்பு கேட்காததற்கு சில சொந்த காரணங்கள் உள்ளன. செல்வம், புகழ் என சமூகத்தில் பெரிய இடத்தில் இருந்தாலும் சிலர் தாங்கள் செய்த வேலையால் மற்றவர்கள் பாதிக்கப்படுவதை உணர்ந்தால் அவர்கள் மன்னிப்பு கேட்கவும் செய்கின்றனர்.
மன்னிப்பு கேட்பவன் மனிதன், மன்னிப்பவன் பெரிய மனிதன் என்பார்கள். சிலர் தப்பு செய்தாலும் அதற்காக வருந்தி மன்னிப்பு கேட்பார்கள். மற்றவர்கள் தங்களின் செயலால் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்கின்றனர். அப்படி கேட்காமல் இருப்பின் தங்களால் தான் அந்த பிரச்னை ஏற்பட்டது என்ற மன வருத்தத்தைத் தரும்.
மன்னிப்பு கேட்பதால் தன்மானம் போய்விடும் என்று அர்த்தமில்லை. தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதால் மனம் இலகுவாகவும் வாய்ப்புள்ளது. சிலர் விடாப்பிடியாக தங்களின் செயலுக்கு மன்னிப்பு கேட்காமலேயே இருப்பார்கள். அந்த ராசிகள் குறித்து பார்ப்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியினர் தலைசிறந்தவர்களாகவும், பிடிவாதமானவர்களாகவும் அறியப்படுகிறார்கள், இவர்கள் செய்த தவறை உணர்ந்து கொண்டாலும், மன்னிப்பு கேட்கும் மனநிலை இல்லாதவர்களாக இருக்கின்றனர். இவர்கள் மன்னிப்பு கேட்டால் தங்களின் கெளரவம், சக்தியை இழந்ததைப் போல சங்கடமாக உணர்கிறார்கள். இதனால் தங்களின் தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பது கடினம்.
கும்பம்
கும்ப ராசியினர் தங்களின் பிழை அல்லது தவறுக்காக மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் நிலை வரும் போது, அது மற்றவர்களை விட தகுதியற்றவர்களாக உணர்கிறார்கள். அப்படிப்பட்ட மோசமான உணர்வு தரும் என்பதற்காகவே தங்களின் தவறுகளை மறைத்து, மறந்துவிடுகிறார்கள்.
மேலும் அப்படிப்பட்ட சூழல் வந்தால் உணர்ச்சிவசப்பட்டு அந்த இடத்திலிருந்து தனியாக சென்றுவிடுகிறார்கள். மன்னிப்புக் கேட்காமல் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், நிலைமையை சரிசெய்வதற்கும் அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடிkக நினைப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் மிகவும் வலுவானவர்களாகத் தோன்றலாம். ஆனால் உண்மையில் அவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். தங்களின் மற்றொரு பக்கத்தை மக்களிடமிருந்து மறைக்க முயல்கிறார்கள்.
இவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும் சூழலால் மிகவும் பலவீனமாக உணர வைக்கிறது. இந்த தருணத்தை மற்றவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அவர்களை காயப்படுத்தலாம் என்று பயப்படக் கூடியவர்கள். இதனால்தான் மன்னிப்பு கேட்காமல் அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற வேறு வழிகளைக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
மீனம்
மீன ராசியினர் தங்களின் தவறை ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்டால் தன்னை ஒரு கெட்டவன் போல மற்றவர்கள் பார்ப்பார்கள். அவர்களின் பார்வையை கையாள முடியாது என நினைக்கின்றனர்.தன்னை கெட்டவராக காட்டிக் கொள்ள விரும்பாத அவர்கள் மன்னிப்பு கேட்பதற்குப் பதிலாக ஓட்டம் பிடிக்க முயல்கிறார்கள்
கன்னி
கன்னி ராசியினர் ஒரு பரிபூரணவாதிகளாக நினைக்கின்றனர். இவர்கள் தங்களின் தவறை வெளிப்படையாக ஏற்றுக் கொண்டு மன்னிப்பு கேட்க விரும்பாதவர்களாகவும், அது கடினம் என்றும் நினைக்கின்றனர். இதனால் அந்த சுழலிலிருந்து தப்பித்தால் போதும் என விலகுகின்றனர்.